மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ்.ஐ., யின் டூவீலர் சாவியை எடுத்து தப்பியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.ராஜபாளையம் போக்குவரத்து எஸ்.ஐ., தாமரைக்கண்ணன். பஞ்சு மார்க்கெட் அருகே ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் வாகன தணிக்கையில் இருந்த போது டூவீலரில் வந்த வாலிபர்களை நிறுத்தி விசாரித்தார்.மெதுவாக நிறுத்துவது போல் டூவீலரில் தப்ப முயன்றவர்களை தடுக்கும் விதமாக சாவியை எடுத்த போது வாக்குவாதம் செய்து வண்டியின் சாவியால் கையின் பெருவிரலில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்திவிட்டு எஸ்.ஐ., யின் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடியுள்ளனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சசி 25, மணி 28, இருவர் மீதும் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து தேடுகின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago