உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சர்ச் திருவிழா தேர் பவனி

 சர்ச் திருவிழா தேர் பவனி

விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள சவேரியார் சர்ச்சில் திருவிழா தேர்பவனியுடன் 10 நாட்கள் நடந்தது. பாண்டியன் நகரில் உள்ள சவேரியார் சர்ச் திருவிழா நவ.28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினசரி மாலை நவநாள் திருப்பலி, மறையுரை நடந்தது. 9ம் நாளான நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் அதிபர் வசந்த், பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் மரிய ஜான் பிராங்க்ளின், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம், பாதிரியார்கள் ஜான்சன் ஜெயபால், சின்னச்சாமி ஏசுராஜ், ஜஸ்டின் திரவியம் தலைமையில் திருப்பலி, மறையுரை நடந்தது. சவேரியார், லுார்து மாதா, மிக்கேல் அதிதுாதர் திரு உருவம் வண்ணமலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மின் அலங்கார தேர்பவனி நடந்தது. 10வது நாளான நேற்று மாலை 6:30 மணிக்கு நற்கருணை பவனி நடந்தது. இறுதியில் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ