மேலும் செய்திகள்
நாளை எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்கள்
26 minutes ago
சாலை பணியாளர் சங்க மாநாடு
26 minutes ago
இளைஞர்கள் ரீல்ஸ்
27 minutes ago
டூவீலர் திருட்டு 2பேர் கைது
28 minutes ago
ரராஜபாளையம்: ராஜபாளையத்தில் இந்திய கம்யூ.,மாநில செயற்குழு, நிர்வாக குழு, பொதுக்குழு கூட்டம் உள்ளரங்கு கூட்டமாக நடந்தது. மூன்று நாள் நடந்த கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தேசிய செயலாளர்கள் ராமகிருஷ்ண பாண்டா, ஆனி ராஜா, மாநில செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், திருப்பூர் எம்.பி., சுப்பராயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதல் நாள் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் அரசியல் சூழல், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரண்டாம் நாள் மாநில குழு கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராமசாமி, குணசேகரன், சாந்தி தலைமையில் நடந்தது. அரசியல் அறிக்கையை மாநில செயலாளர் வீரபாண்டியன், வேலை அறிக்கையை துணைச்செயலாளர் ரவி, தேர்தல் நடைமுறைகள் குறித்து அறிக்கையை துணைச் செயலாளர் பெரியசாமி முன்வைத்தனர். மாநில குழு கூட்டத்தில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மேகதாது அணை குறித்து உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்ய மனு தாக்கல். இ.எஸ்.ஐ., திட்டத்தில் விவசாய தொழிலாளர்களை சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் தொழிலாளர் பிரச்னைகள் குறித்து, தமிழக அரசு கவனம் செலுத்த வலியுறுத்தல். கோவை-, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு கண்டனம். துாய்மை பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு. வ.உ.சி இழுத்த செக்கினை செம்மொழி பூங்காவில் காட்சிப்படுத்துக. விதிகளை தளர்வு செய்து தமிழ்நாடு முழுவதும் வீடில்லா ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்கிடு. சிறப்பு உட்கூறு திட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு மடை மாற்றாதீர். கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட ரூ.5.50 லட்சம் நிதி வழங்குக.
26 minutes ago
26 minutes ago
27 minutes ago
28 minutes ago