உள்ளூர் செய்திகள்

பட்டாசு பறிமுதல்

சிவகாசி: வடமலாபுரம் அண்ணாதுரை காலனியைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி 50. இவர் தனது வீட்டில் அரசு அனுமதி இன்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.* கீழ திருத்தங்கல் முத்தமிழ் புரம் காலனியைச் சேர்ந்த கணேசமூர்த்தி விஸ்வநத்தத்தில் உள்ள தகர செட்டில் அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். இதேபோல் பாரைப்பட்டி திருப்பதி நகர் நாகராஜ் 44, அவரது மனைவி அழகு லட்சுமி 34, ஆகியோர் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தனர். மூன்று பேரையும் கிழக்கு போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை