மேலும் செய்திகள்
கோடவுனிற்கு சீல்
27-Sep-2024
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரத்தில் முன் விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் கட்டட தொழிலாளி ராஜசேகரை 40, வெட்டிக் கொலை செய்த மீன் வியாபாரி விநாயக மூர்த்தி 53, அவரது மகன்களான பிரகாசம் 28, விக்ரம் 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் . இவருக்கும் அருகில் வசிக்கும் மீன் வியாபாரி விநாயகமூர்த்தி குடும்பத்திற்கும் ஒரு ஆண்டாக முன் விரோதம் இருந்து வந்தது. அவ்வப்போது தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜசேகருக்கும் விநாயகமூர்த்திக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சண்டையில் விநாயகமூர்த்தி, அவரது மகன்கள் வைர பிரகாசம், விக்ரம், ஆகியோர் ராஜசேகரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மூவரையும் கிழக்கு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
27-Sep-2024