மேலும் செய்திகள்
கணவன் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி சிக்கினார்
18-Dec-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மாட்டு தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுவை வெட்டிக்கொன்று இறைச்சி திருடி சென்ற மர்ம நபர்களை கிருஷ்ணன்கோவில் போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா கொந்தராயன் குளத்தைச் சேர்ந்தவர் மாகாளி 40. இவர் மங்கலத்தில் அரசு மாணவர் விடுதியில் சமையலராக உள்ளார். இவருக்கு சொக்கலாம் பட்டியில் இருந்து சல்லிபட்டி செல்லும் ரோட்டில் வயல் உள்ளது. அங்கு மாட்டுத்தொழுவம் அமைத்து அதில் பசு வளர்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவு 8:00 மணிக்கு மாட்டுக்கு உணவு வைத்துவிட்டு சென்ற நிலை யில், நேற்று காலை 6:30 மணிக்கு மீண்டும் வந்து பார்த்தபோது, பசு வெட்டி கொல்லப்பட்டு இறைச்சி, எலும்புகள் எடுக்கப்பட்ட நிலையில் தலை மற்றும் உடலின் இதர பகுதி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கிருஷ்ணன் கோவில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, சுற்றியுள்ள வயல்களில் தங்கி இருந்தவர்கள், சுற்றியுள்ள கிராமங்களில் விசாரணை நடத்தினர். பசுவை வெட்டிக்கொன்ற நபர்களை தேடி வருகின்றனர்.
18-Dec-2025