உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தும்முசின்னம்பட்டியில் மழையால் அழுகிய பயிர்கள்

 தும்முசின்னம்பட்டியில் மழையால் அழுகிய பயிர்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே தும்முசின்னம்பட்டியில் சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் தொடர் மழையால் அழுகியதில் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டியில் கம்பு, சோளம், மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் நுாற்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ளனர். 20 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், விளை நிலங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பயிர்கள் அழுக துவங்கின. இது குறித்து இப்பகுதி விவசாயிகள்: ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். ஏற்கனவே படை புழுக்கள், பன்றிகள், பயிர்களை நாசம் செய் கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி, வளர்ந்துள்ள பயிர்கள் தொடர்மழையால் அழுகி விட்டன. லட்சக்கணக்கில் கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் வாங்கிய கடனை அடைப்பதா, அழுகிய பயிர்களை என்ன செய்வது என்பது தெரியாமல் திணறி வருகிறோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ