உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த ரோடு தடுமாறும் வாகனங்கள்

சேதமடைந்த ரோடு தடுமாறும் வாகனங்கள்

சிவகாசி : சிவகாசி விளாம்பட்டி ரோடு விலக்கிலிருந்து சித்துராஜபுரம் செல்லும் ரோட்டில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி விளாம்பட்டி ரோடு விலக்கிலிருந்து சித்துராஜபுரம் 3 கி.மீ.,தொலைவில் உள்ளது. சித்துராஜபுரம் மட்டுமின்றி பூலாவூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பிருந்தாவனம் நகர், ராஜதுரை நகர் பகுதி மக்கள் சிவகாசிக்கு வர இந்த ரோட்டினை பயன்படுத்துகின்றனர்.இந்த ரோடு ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. ஒரு சில இடங்களில் குடிநீர் குழாய் உடைந்ததால் அப்பகுதியில் ரோடும் பெரிய பள்ளமாக மாறிவிட்டது. எனவே இப்பகுதியில் சேதமடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ