உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த அடிகுழாய்: குடியிருப்போர் அவதி

சேதமடைந்த அடிகுழாய்: குடியிருப்போர் அவதி

சிவகாசி: திருத்தங்கல் பாண்டி கோயில் தெருவில் நடுரோட்டில் பயன்பாடு இன்றி சேதமடைந்துள்ள அடிகுழாயை அகற்றி ரோட்டை சீரமைக்க வேண்டும் என குடியிருப்போர் எதிர்பார்க்கின்றனர்.திருத்தங்கல் பாண்டி கோயில் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டில் கைப்பம்பு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது பயன்பாட்டில் இல்லாத நிலையில் அடிகுழாய் சேதமடைந்து நடுரோட்டில் விழுந்துள்ளது.இதனால் சைக்கிள் டூவீலர்களே விலகிச் செல்ல முடியவில்லை. ரோடு சேதம் அடைந்த நிலையில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வருவதில் சிரமம் ஏற்படுகிறது. தவிர குழந்தைகள், பெரியவர்கள் பள்ளி மாணவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே இப்பகுதியில் சேதமடைந்த ரோட்டை சீரமைப்பதோடு அடிகுழாயை அகற்றி ஆழ் துளையையும் மூட வேண்டும் என குடியிருப்போர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ