உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஏழாயிரம்பண்ணையில் சேதமான நிழற்குடை

ஏழாயிரம்பண்ணையில் சேதமான நிழற்குடை

சாத்தூர் : ஏழாயிரம்பண்ணையில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஏழாயிரம்பண்ணை - கோவில்பட்டி ரோட்டில் அரசு ஆரம்பசுகாதார நிலையம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடை பாழடைந்து சேதமடைந்த நிலையில் உள்ளது.நிழற்குடையின் சுவர்கள் விரிசலடைந்தும், பயணிகள் உட்காரும் மேடை முற்றிலுமாக இடிந்து போய் உள்ளது. மேலும் ரோட்டை விட தாழ்வாக உள்ளதால் சிறிய மழை பெய்தாலும் நிழற்குடை முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கி விடுகிறது.இதனால் ஏழாயிரம் பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பணிகள். பஸ் வருவதற்காக வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது.மழைக்காலத்தில் ஒதுங்க கூட இடம் இன்றி பொதுமக்கள் அவதி படுகின்றனர். எனவே சேதமடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் எனமக்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை