மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
08-Sep-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் மாடிப்படியில் இருந்து இறங்கும்போது கால்தவறி விழுந்த தலைமை காவலர் சுரேஷ்குமார் உயிரிழந்தார். வத்திராயிருப்பு தாலுகா துலுக்க பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் 43. இவரது மனைவி குரு லட்சுமி 41. நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சுரேஷ்குமார் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். செப். 22 மதியம் 3:00 மணிக்கு ஸ்டேஷன் முதல் மாடியில் இருந்து கீழே இறங்கி வரும்போது கால் தவறி கீழே விழுந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை 10:00 மணிக்கு உயிரிழந்தார். நத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Sep-2025