ஸ்ரீவி.,யில் அனுமதி பெறாத 35 கட்டடங்களை சீல் வைக்க முடிவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் கட்டட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 35 கட்டடங்களை பூட்டி சீல் வைக்க நகராட்சிமுடிவு செய்துள்ளது. இது குறித்து நகராட்சி நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது; நகரில் கட்டட அனுமதி வாங்காமல் வீடுகள், கடைகள் என 35 கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு தற்போது வரை உரிமையாளர்களால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படாததால் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகள் படி பூட்டி சீல் வைக்க ஏதுவாக உடனடியாக காலி செய்ய அறிவிக்கப்படுகிறது, என்றார். இதன்படி நகரில் கீழரத வீதி, வடக்கு ரத வீதி, மேலரத வீதி, பேட்டை கடை தெரு ஆகிய இடங்களில் உள்ள 4 வணிக கட்டடங்களில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.