மேலும் செய்திகள்
திருக்கோவிலுாரில் கண் சிகிச்சை முகாம் துவக்கம்
14-Apr-2025
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவில் ஸ்கேன் எடுக்க வசதி இன்றி நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இங்குள்ள கண் சிகிச்சைப் பிரிவில் நவீன கருவி மூலம் பார்வை குறைபாடு, கருவிழி, கண்புரை, கண் நரம்பு, கண்ணின் யுவியா பகுதி பரிசோதனைகள், கண் தானம், குழந்தைகளுக்கான கண் பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் செய்யப்படுகிறது.குளுக்கோமா எனப்படும் கண் நீர் அழுத்த நோய், நீரிழிவு விழித்திரை நோய், பின்பக்க காப்ஸ்யூல் ஒளிப்புகா நிலை, கண் சதை வளர்ச்சி ஆகிய பிரச்னைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் லேசர் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.தினமும் 150 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு வெளியில் ஸ்கேன் எடுத்துவர பரிந்துரை செய்கின்றனர். இதனால் ஏழைகள் அதிக பணம் செலவழித்து தனியார் மையத்தில் ஸ்கேன் எடுத்து வரும் நிலையுள்ளது. இதனால் ஏழைகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இம் மருத்துவமனையில் கண் ஸ்கேனிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.
14-Apr-2025