மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
14 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
14 hour(s) ago
நரிக்குடி:நரிக்குடி கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தில் விரிவாக்கப் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் சப்ளை இல்லாததால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.நரிக்குடி கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தில் விரிவாக்க பகுதிகளில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் குடிநீரின்றி சிரமப்பட்டனர். குடிநீர் சப்ளை செய்ய வேண்டி வலியுறுத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t7vg7043&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=015வது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. பணிகள் முடிவுற்ற நிலையில் குடிநீர் சப்ளை இல்லாமல் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். உடனடியாக குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.வேலம்மாள், ஊராட்சி தலைவர்: விரிவாக்க பகுதியில் குடிநீர் சப்ளை செய்ய குழாய்கள் பதிக்கப்பட்டன. கோடை காலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பகுதிகளுக்கு பற்றாக்குறையால் தண்ணீர் சப்ளை குறைந்து வரும் நிலையில், விரிவாக்க பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியாத நிலை உள்ளது. ஆகவே கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். விரைவில் தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
14 hour(s) ago
14 hour(s) ago