உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தினமலர் செய்தி எதிரொலி சேதமடைந்த ரோடு சீரமைப்பு

தினமலர் செய்தி எதிரொலி சேதமடைந்த ரோடு சீரமைப்பு

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி ஜவஹர்லால் நேரு ரோட்டில் சேதம் அடைந்த ரோடு சீரமைக்கப்பட்டது.சிவகாசி பராசக்தி காலனி வழியாகச் செல்லும் ஜவஹர்லால் நேரு ரோடு சேதம் அடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து இங்கு மூன்று மாதங்களுக்கு முன்பு புதிதாக ரோடு போடும் பணி தொடங்கியது.இரு மாதத்திற்கு முன்பு ரோடு போடும் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் இதே ரோட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் அருகே அதற்குள்ளாகவே ரோடு சிதைந்து விட்டது. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது.புதிதாக போடப்பட்ட இரு மாதங்களிலேயே ரோடு சேதம் அடைந்ததால் மக்கள் அதிருப்தியடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அப்பகுதியில் சேதமடைந்த ரோடு உடனடியாக சீரமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்