உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அருப்புக்கோட்டை நகராட்சியில் குப்பைகளாக கிடக்கும் ஆவணங்கள்

அருப்புக்கோட்டை நகராட்சியில் குப்பைகளாக கிடக்கும் ஆவணங்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்கள் பல ஆண்டுகளாக குப்பைகளாக போடப்பட்டு உள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்டு 36 வார்டுகள் உள்ளன. வார்டுகளை சேர்ந்த மக்கள் பல்வேறு குறைகளை மனுக்களாக கொடுப்பதற்கும், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், இடம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்வு காண நகராட்சி அலுவலகம் வந்து செல்வர். அலுவலகத்தின் முதல் மாடியில் சர்வே பிரிவு, நகரமைப்பு பிரிவு ,சுகாதார பிரிவு இயங்கி வருகிறது. இந்தப் பிரிவிற்கு தினமும் 200 க்கும் மேற்பட்ட மக்கள் வருவர். மக்கள் நடந்து வரும் பாதையில் நகராட்சி அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஆவணங்கள் பல ஆண்டுகளாக குப்பைகள் போன்று வைக்கப்பட்டுள்ளது. மழையாலும், வெயிலாலும் ஆவணங்கள் சேதமடைந்து வருகின்றன. ஆவணங்கள் தேவையில்லை என்றால் அவற்றை முறையாக அப்புறப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். கட்டுக்கட்டாக கிடக்கும் ஆவணங்களில் பூச்சிகள் தங்கும் இடமாக மாறி வருகிறது. நடந்து செல்லும் மக்களுக்கும் இடைஞ்சலாக உள்ளது. தேவையற்ற ஆவணங்களை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை