உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  லாரி மீது வேன் மோதல் டிரைவர் பலி

 லாரி மீது வேன் மோதல் டிரைவர் பலி

சாத்துார்: திருநெல்வேலி மாவட்டம் முனி மூர்த்தீஸ் புரத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் 29, கூரியர் ஆபீஸில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:15 மணிக்கு கூரியர் வேனை ஓட்டிக் கொண்டு மதுரை நோக்கி வந்தார். நேற்று அதிகாலை 12:10 மணிக்கு நான்கு வழிச்சாலையில் சாத்துார் மேம்பாலத்தில் முன்னால் சென்ற மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், ஓட்டிச் சென்ற சிமெண்ட் லாரியின் பின்புறம் வேன் மோதியது. இதில் வேன் டிரைவர் பாக்கியராஜ் சம்பவ இடத்தில் பலியானார். லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் தப்பினார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்