உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரேஷன் கடைகளில் கழிப்பறைகள் அமைக்க ஊழியர்கள் எதிர்பார்ப்பு திண்டாடும் ஊழியர்கள்

ரேஷன் கடைகளில் கழிப்பறைகள் அமைக்க ஊழியர்கள் எதிர்பார்ப்பு திண்டாடும் ஊழியர்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 970 ரேஷன் கடைகள் உள்ளன. 60க்கும் மேற்பட்ட நடமாடும் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் போதுமான கழிப்பறை வசதி இல்லை. இது தமிழக அளவில் உள்ள பிரச்னை. அப்பகுதி மக்களின் உதவியோடு அருகில் உள்ள வீடுகளில் தான் கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது ரேஷன் கடையில் விற்பனையாளர் பணியில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிளவில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற கழிப்பறை இல்லாத சூழல் அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.குடிநீர் குடித்து விட்டு நீண்ட நேரம் சிறுநீர் கழிக்க காத்து பின் செல்ல வேண்டி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை மானிய கோரிக்கையில் கழிப்பறை கட்டும் பணிகள் விரைவில் துவங்கும் என அரசு அறிவித்துள்ளது.இருப்பினும் மாற்று ஏற்பாடாக விரைந்து பணிகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுமதி அளித்தால் விரைவில் ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை