உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊரெல்லாம் மழை பெய்தும் 5 நாளாக குடிநீர் வரவில்லை

ஊரெல்லாம் மழை பெய்தும் 5 நாளாக குடிநீர் வரவில்லை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையினால் கண்மாய்கள் நிரம்பி வழியும் நிலையில், கொடிக்குளம் பேரூராட்சியில் சில வார்டுகளில் கடந்த ஐந்து நாட்களாக குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இரண்டு மாதமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் நிரம்பி திறந்து விடப்பட்டு, வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள அனைத்து கண்மாய்களும் நிரம்பி சிவகாசி தாலுகா கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கொடிக்குளம் பேரூராட்சியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சரி செய்யப்படாததால், 11 வது வார்டு முதல் 15 வது வார்டு வரை பல்வேறு தெருக்களில் கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குடிக்க தண்ணீரின்றி சிரமப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.எனவே, போர்க்கால அடிப்படையில் குழாய் உடைப்பை சரி செய்து உடனடியாக தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடிக்குளம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை