உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி மின்வேலியை மிதித்ததால்

 மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி மின்வேலியை மிதித்ததால்

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தொப்புலாக்கரை விவசாயி மாரிச்சாமி 32. ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள ஓடை அருகில் இவருக்கு விவசாய நிலம் உள்ளது. நேற்று காலை 10:00 மணிக்கு பயிர்களுக்கு உரம் தெளிக்க சென்றார். இவருடைய நிலத்துக்கு அருகில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி தங்கபாண்டியன் 43, நிலம் உள்ளது. இதில் உள்ள பயிர்களை சேதப்படுத்த வரும் காட்டுப்பன்றிகளை தடுக்க வரப்பு ஓரத்தில் மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் தன் நிலத்திற்கு சென்ற மாரிச்சாமி தெரியாமல் மின்வேலியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பலியானார். நேற்று மதியம் 3:00 மணி வரை இவர் வீட்டுக்கு வராததால் அக்கம் பக்கத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது மின்சாரம் பாய்ந்த நிலையில் அவர் இறந்து கிடந்தது தெரிந்தது. திருச்சுழி பரளச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை