காற்றில் சாய்ந்த கரும்பு வேதனையில் விவசாயிகள்
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர் அறுவடை செய்யும் நேரத்தில் பலத்த காற்றில் சாய்ந்து போனதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் 50 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிர் பயிரிடப்பட்டுள்ளது. கரும்பு பயிரிடப்பட்டு 10 மாதங்கள் ஆன நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் 2 நாட்களுக்கு முன்பு பலத்த காற்று வீசியதால் நன்கு விளைந்த கரும்புகள் அனைத்தும் சாய்ந்து விட்டன. இதைப் பார்த்து ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவழித்து, அறுவடை செய்யும் நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என புலம்பி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள்: அறுவடை செய்யும் நேரத்தில் பலத்த காற்றிற்கு கரும்புகள் அனைத்தும் சாய்ந்து விட்டன. சாய்ந்த கரும்புகள் விலை போகாது. நாங்கள் செலவழித்த பணத்தையும் எடுக்க முடியாமல் நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளது. கரும்பு பயிருக்கு இன்சூரன்ஸ் கிடையாது. கடன் வாங்கி விவசாயம் செய்தும் பலன் இல்லாமல் போய்விட்டது. என்றனர்.