உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உணவு பகுப்பாய்வு வாகன சேவை துவக்கம்

உணவு பகுப்பாய்வு வாகன சேவை துவக்கம்

விருதுநகர்: விருதுநகரில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை கலெக்டர் சுகபுத்ரா கொடியசைத்து துவங்கி வைத்தார். உணவுகளின் தரம் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஓட்டல்களில் உணவு கலப்படமின்றி தயாரிக்கப்படுகிறதா, பண்டங்கள் தரமாக உள்ளனவா என்பன குறித்து நேரில் கண்டறிவதற்காக, நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகன திட்டம் செயல்படுகிறது. மாவட்டத்தில் இந்த நடமாடும் பகுப்பாய்வுக்கூடம், ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை, இதர அரசு விடுமுறைகள் தவிர்த்து, மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களுக்கும், மாநகராட்சி, நகராட்சிகளுக்கு பயணம் செய்யும். தங்கள் பகுதிக்கு இந்த வாகனம் வரும் போது, உணவுப் பொருட்கள் தொடர்பான தங்களின் சந்தேகங்களைக் கேட்டும், பரிசோதித்தும் பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை