| ADDED : நவ 18, 2025 03:42 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரத்தினம் மருத்துவமனை, ரத்தினம் செவிலியர் கல்லூரி இணைந்து, மல்லம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு நடந்த முகாமில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள், பொது மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்டவைகள் கிராம மக்களுக்கு செய்யப்பட்டது. கல்லூரியின் தலைவர் டாக்டர் விஜயகுமார், துணைத்தலைவர் சிந்துரேகா ஆகியோர் தலைமையில், டாக்டர்கள் அஜித்குமார், கணேஷ்குமார், காவியா, அபிநய ஜெய கீதா மற்றும் செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் இணைந்து பரிசோதனைகளை மேற்கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்தனர்.