உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  இலவச மருத்துவ முகாம்

 இலவச மருத்துவ முகாம்

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே அய்யனாபுரத்தில் நெசவாளர் முன்னேற்ற கழகம், கலசலிங்கம் மருத்துவக் கல்லுாரி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. டால்பின் முருகதாஸ், தலைமை வகித்தார். தொழிலதிபர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். புதிய ராஜ் வரவேற்றார். சங்கத் துணைத் தலைவர் சிவலிங்கம் ஊர் தலைவர் மாரிச்செல்வம் வாழ்த்தினர். 138 பயனாளர்கள் கலந்து கொண்டனர். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த வகை கண்டறியப்பட்டது. பொது, செவித்திறன் குறைபாடு சம்பந்தமான இலவச பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை சங்க மாநில தலைவர் கணேசன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ