உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  லட்சார்ச்சனை பொன்விழா

 லட்சார்ச்சனை பொன்விழா

விருதுநகர்: விருதுநகர் வத்திரா யிருப்பு ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் ராம ஐயப்ப பக்த சபா அறக்கட்டளை சார்பில் ஐயப்ப லட்சார்ச்சனை பொன்விழா டிச.25 முதல் நடக்கிறது. டிச. 25ல் மஹா ருத்ர பூஜையுடன் விழா தொடங்கியது. அன்று இரவு ஐயப்ப சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று உலக நன்மை கருதி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று (டிச.27) காலை மஹா பூர்ணாஹுதியுடன் 121 கலச மஹா அபி ஷேகம் நடக்கிறது. மாலையில் கர்நாடக இசை கச்சேரி நடக்கிறது. நாளை பொன் விழாவை முன்னிட்டு காலை 6:00 மணி முதல் ஐயப்ப லட்சார்ச்சனை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு ஆஞ்சநேய உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை அறக் கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை