உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பணிமனையில் தரமற்ற உணவுகளால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சிரமம்

பணிமனையில் தரமற்ற உணவுகளால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சிரமம்

மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் 2449 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு காலை, மதியம் நேரங்களில் பணிமனைகளிலேயே பொங்கல், சாப்பாடு, மாலை, அதிகாலை டீ ஆகியவை நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டது. இதற்காக சமையல்காரர், உதவியாளர் பணியமர்த்தப்பட்டு, நிர்வாகம் உணவு தயாரிப்புக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தது.இந்நிலையில் தற்போது அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்துார், காரியப்பட்டி, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் 1,2, ஆகிய பணிமனைகளில் சமையல்காரர், உதவியாளர், உணவு தயாரிப்பு என அனைத்தும் மொத்தமாக தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதில் காலை பொங்கலுக்கு ரூ.12 முதல் ரூ. 17 வரையும், மதியம் சாப்பாட்டிற்காக ரூ. 25 முதல் ரூ.29 வரையும் தொகை நிர்ணயம் செய்து, குறைவான தொகை கோரியவர்களுக்கு சமையல் டெண்டர் வழங்கப்பட்டது.ஆனால் இந்த டெண்டரை அரசியல்வாதிகள் தங்களுக்கு வேண்டியவர்களின் பெயரில் எடுத்து நடத்தி வருகின்றனர். இதனால் தற்போது உணவுகளில் தரம் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உணவுகளில் இருந்த தரம், ஒப்பந்ததாரர்கள் வழங்கும் உணவுகளில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஒப்பந்ததாரர்கள் பணி நேரத்தில் கேண்டீன் உணவு சாப்பிடாத ஊழியர்கள் பெயர்களை தாங்களாகவே எழுதி கணக்கு காண்பிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இந்த தரமற்ற உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளும் ஊழியர்கள் பலருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. விருதுநகர் மாவட்ட போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்தாரர்களை அகற்ற வேண்டும்.மேலும் நிர்வாகம் உணவுப்பொருட்களை வாங்கி கொடுத்து தினக்கூலி அடிப்படையில் சமையல்காரர், உதவியாளர் நியமிக்கப்பட்டால் ஊழியர்களுக்கு தரமான உணவுகள் கிடைக்கும். பணியாளர்களையும் நலமுடன் பேண முடியும். எனவே அரசு போக்குவரத்து பணிமனைகளில் தரமான உணவுகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை