மேலும் செய்திகள்
ஆட்டோ திருடன் சிக்கினான்
28-Sep-2024
சிவகாசி : சிவகாசி அரசு கல்லுாரி பகுதியில் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ஒரு மூடையில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. ஆட்டோ ஓட்டி வந்த ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அருணாசலபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரனை 26, போலீசார் கைது செய்து, புகயிலைப் பொருட்கள், ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதேபோல் சிவகாசி அருகே ரங்கபாளையத்தை சேர்ந்த சரஸ்வதி 48, தனது பெட்டி கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தார். எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
28-Sep-2024