உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வத்திராயிருப்பில் கனமழை

வத்திராயிருப்பில் கனமழை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தாலுகாவில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்தும் மொத்தம் ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு மாதங்களாக பெய்து வரும் மழையால் வத்திராயிருப்பு தாலுகாவில் அணைகள், கண்மாய்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணி முதல் 12:00 மணி வரை பெய்த கனமழையால் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது.பிளவக்கல் பெரியாறு அணையில் 58 மி.மீ., மழை பெய்ததில் அணைக்கு வினாடிக்கு 589.32 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 522.69 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இருந்தபோதிலும் 47.56 அடி உயரம் உள்ள இந்த அணையில் 40. 36 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.இதேபோல் கோவிலாறு அணையில் 64.20 மில்லி மீட்டர் மழை பெய்ததில் அணைக்கு வினாடிக்கு 462.58 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 533 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது 42.64 அடி உயரம் உள்ள இந்த அணையில் 34.78 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.வத்திராருப்பில் 26.8 மில்லி மீட்டர் மழை பெய்ததில் அர்ச்சனா நதியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. வில்வராயன் குளம் தடுப்பணையில் அதிகளவில் தண்ணீர் வழிந்து ஓடியது.இதே போல் நேற்று முன் தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பெய்தமழையின் காரணமாகபெரியகுளம் கண்மாயிலிருந்து அதிகளவு தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை