உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாற்று வழியில் பாலம்  அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மாற்று வழியில் பாலம்  அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் தங்கவேலு. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:சிவகாசி-திருத்தங்கல் ரயில்வே லெவல் கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அப்பகுதியில் வீடுகள், கோயில், வணிக கட்டடங்கள் உள்ளன. அப்பகுதியை கையகப்படுத்தினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். ரயில்வே கேட்டிற்கு தெற்கிலிருந்து வடக்கே ரயில்வே பீடர் ரோடு வரை மாற்று வழித்தடத்தில் மேம்பாலம் அமைத்தால் அரசு இழப்பீடு வழங்குவதுகுறையும். இதை வலியுறுத்தி தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ