மேலும் செய்திகள்
'பள்ளிகள் நிர்வாகத்தில் எக்கச்சக்க குளறுபடி'
02-Jan-2025
விருதுநகர : விருதுநகரில் பிளஸ் 2 மாணவர்களுடன் பொதுத்தேர்வு, உயர்கல்வி தொடர்பாக கலெக்டர் ஜெயசீலன் காணொலி வாயிலாக பேசினார்.மாவட்டத்தைச் சேர்ந்த 100 அரசு பள்ளிகள், 67 அரசு உதவி பெறும் பள்ளிகள், 84 தனியார் பள்ளிகளில் என மொத்தம் 251 பள்ளிகளில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களிடம்,கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது:தற்போது கல்வியாண்டின் முக்கியமான தேர்வு கால கட்டத்தை நோக்கி இருக்கிறோம். எந்த ஒரு போட்டியிலும் இறுதிச்சுற்று என்பது மிக முக்கியம். அதில்தான் சோர்வு, களைப்பு போன்றவை ஏற்படும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் யார் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்கிறார்களோ அவர்களே வெற்றியடைகிறார்கள்.தற்போது எவ்வளவு நேரம் படிக்கிறீர்களோ அதைவிட ஒரு நாளைக்கு சிறிது கூடுதலாக முயற்சி செய்தால், பெறக்கூடிய மதிப்பெண்களும், அதனால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் மிகப்பெரிய அளவில் இருக்கும். உங்களுடைய உழைப்பும், கவனமும் தேர்வை நோக்கி இருக்க வேண்டும். நமக்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்து முன்னேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன, என்றார்.
02-Jan-2025