உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மீண்டும் மின் வேலி விபத்து: கணவன், மனைவி படுகாயம்

 மீண்டும் மின் வேலி விபத்து: கணவன், மனைவி படுகாயம்

நரிக்குடி: விருதுநகர் மாவட்டத்தில் நவ. மாதம் மட்டும் மூன்றாவது முறையாக மின்வேலி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று காரியாபட்டியில் நடந்த விபத்தில் கார்த்திக் 32, மனைவி கார்த்தீஸ்வரி 26, படுகாயமடைந்துள்ளனர். காரியாபட்டி அரசகுளத்தை சேர்ந்தவர் விவசாயி கார்த்திக் 32. மனைவி கார்த்திஸ்வரி 26. இவர் நரிக்குடி இடையபட்டியில் குடும்பத்துடன் உள்ளார். அங்குள்ள நிலத்தில் வெங்காய அறுவடை செய்து விட்டு, டூவீலரில் இருவரும் வீடு திரும்பினர். லேசான மழை பெய்தது. ஆவாரங்குளம் ரோட்டில் வந்தபோது காட்டுப்பன்றிக்காக விவசாயி ஒருவர் மின் வேலி அமைத்திருந்தார். அவை அறுந்து ரோட்டில் கிடந்ததை கவனிக்காமல் டூவீலரில் கடந்து செல்ல முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி இருவரும் துாக்கி வீசப்பட்டனர். கார்த்திக்கிற்கு கை, கால்கள் செயல் இழந்தன. மனைவி படுகாயம் அடைந்தார். இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அ.முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் நவ.ல் மட்டும் மூன்று மின்வேலி விபத்துக்கள் அரங்கேறி உள்ளன. நவ. 5ல் சாத்துார் நடுவப்பட்டியில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ரவிக்குமார் 47, சுரேஷ்குமார் 45, உயிரிழந்தனர். நவ. 23ல் மீண்டும் திருச்சுழி அருகே தொப்புலாகரையில் விளைநிலத்தில் போடப்பட்டிருந்த மின் வேலியை மிதித்த விவசாயி மாரிச்சாமி 32, மின்சாரம் பாய்ந்து பலியானார். எனவே அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை