| ADDED : ஜன 10, 2024 12:08 AM
சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் முதுநிலை இயற்பியல், ஆராய்ச்சி துறை, சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி நடந்தது.கல்லுாரி தாளாளர் திலகவதி, செயலாளர் அருணா, நிர்வாக குழு உறுப்பினர்கள் மகேஸ்வரன், ப்ரீத்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இயற்பியல் துறை தலைவர் கிங்சிலின் மேரி ஜெனோவா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார்.மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சிதம்பரநாதன், இதயம் எண்ணெய் தலைமை நிர்வாக அதிகாரி இதயம் முத்து, உணவு விஞ்ஞானி பசுபதி , பரீஷன் பேசினர். துணை பேராசிரியர் செல்வ லட்சுமி தொகுத்து வழங்கினார். துணை பேராசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி அறிவியல் துறைபேராசிரியர்கள் செய்தனர்.