செயல்படாத இ- - சேவை மைய கட்டடங்கள் வீணாகுது: நகருக்கு அலைந்து வேதனைப்படும் மக்கள்
தமிழக அரசு வாரிசு, ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ் உட்பட பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் கட்டணம் ஆகிய நடைமுறையில் ஆன்லைன் முறைக்கு மாற்றியுள்ளது. கிராமப் பகுதியில் உள்ள மக்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் அரசின் அனைத்து நல திட்டங்களும் கிடைக்கும் நோக்கத்தில் இ- - சேவை மையங்கள் மத்திய மாநில அரசு நிதி உதவியோடு மின்னணு ஆளுமை திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டன. இந்த மையத்தில் அரசு துறை சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் உட்பட 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கான சேவைகள் வழங்க நீதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்நிலையில் பெரும்பாலான கிராம சேவை மையங்கள் பயன்பாட்டிற்கு வராதத்துடன் கம்ப்யூட்டர், ஆட்கள் நியமனம் உட்பட ஒதுக்கீடு செய்யாதது போன்ற பிரச்னைகளால் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் கணினி பழுது, நெட்வொர்க் சேவை பாதிப்பு என தொழில் நுட்ப கோளாறுகளை காரணம் காட்டி சேவை பெறுவதில் சிக்கல் ஏற்படுத்தி வருவதுடன் மாற்று பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதால் இதன் அடிப்படை நோக்கம் சிதைவதுடன் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது. எனவே கிராம பகுதி களில் அமைக்கப்பட்டுள்ள இ- - சேவை மைய கட்டடங்கள் ஏற்படுத்தப்பட்ட நோக்கத்திற்கான பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் தங்கள் சான்றிதழ் பெற நகரங்களுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்படாது.