உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் நோயாளிகள்

 அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் நோயாளிகள்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வத்திராயிருப்பு தாலுகாவில் ஒரு ஊராட்சி ஒன்றியம், 4 பேரூராட்சிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் நலன் கருதி வத்திராயிருப்பில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் 700 முதல் ஆயிரம் பேர் சிகிச்சை பெற வரும் நிலையில், குளிர் காலத்தில் மேலும் ஒரு மடங்கு நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். இங்கு 10 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில்,8 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதிலும் அவ்வப்போது ஒரு சில டாக்டர்கள், அயல்பணி காரணமாக விருதுநகர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று விடுகின்றனர். 2 பெண் டாக்டர்களில் ஒரு டாக்டர் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை பணிக்கு சென்று விடுகின்றனர். இதனால் கர்ப்பிணிகள் சிகிச்சை பெற சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். போதிய மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இல்லை. மேலும் இங்குள்ள கட்டடங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக நிலையில் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வத்திராயிருப்பு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே,, கூடுதல் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் நியமிக்கவும், புதிய கட்டிடங்கள் கட்டவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை