உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாலையம்பட்டி தேரில் சுவாமி சிம்மாசனம் பொருத்தும் பணி

பாலையம்பட்டி தேரில் சுவாமி சிம்மாசனம் பொருத்தும் பணி

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேணுகோபால சுவாமி கோயில் தேர் புதுப்பித்து வரும் நிலையில் நேற்று சுவாமி உட்காரும் சிம்மாசனம் பொருத்தும் பணி நடந்தது.கோயில் தேர் 1952 ல் செய்யப்பட்டு ஆண்டு தோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் தேர் ஊர்வலம் வரும். தேர் பழுதடைந்ததால் 5 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் தேரை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான நேற்று சுவாமி வைப்பதற்கான சிம்மாசனம் பொருத்தும் பணி நடந்தது.இது குறித்து ஸ்தபதி செல்வம்: இந்தத் தேரை வடிவமைத்தவர் எனது தந்தை. பல்வேறு நுணுக்கமான சிற்பங்கள் உள்ளன. பின்னர் நான் இந்த தேரை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். முக்கிய பணியாக சுவாமி வைக்கப்படும் சிம்மாசனம் பொருத்தும் பணி நடந்தது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விரைவில் வெள்ளோட்டம் விடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை