உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  எஸ்.ஐ.ஆர் பணியில் தீவிரம் வருவாய் துறை பணிகள் பாதிப்பு

 எஸ்.ஐ.ஆர் பணியில் தீவிரம் வருவாய் துறை பணிகள் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் தலையாரிகள் முதல் தாசில்தார்கள் வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டுள்ளதால் வருவாய் துறையில் பிற பணிகள் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நவம்பர் 4 முதல் நடந்து வருகிறது. இதில் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது இதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் வருவாய்த் துறையில் தலையாரி முதல் தாசில்தார் வரை அனைத்து ஊழியர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதால் வழக்கமாக நடக்கும் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வகை அரசு சான்றிதழ்களை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு மக்கள் வீண் அலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எப்படி இருந்த போதிலும் டிச.4 வரை இதே நிலைதான் நீடிக்கும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ