உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாக்கடை ஆறாக மாறிவரும் வைப்பாறு கழிவு நீர் கலப்பதை தடுப்பது அவசியம்

சாக்கடை ஆறாக மாறிவரும் வைப்பாறு கழிவு நீர் கலப்பதை தடுப்பது அவசியம்

சாத்துார்: சாத்துார் வைப்பாற்றில் தொடர்ந்து சாக்கடை கலந்து வருவதால் வற்றாத சாக்கடை ஆறாக மாறிவருகிறது.வெம்பக்கோட்டையில் உற்பத்தியாகும் வைப்பாறு துாத்துக்குடி மாவட்டம் வேம்பாறு அருகே கடலில் கலக்கிறது. துாய நீராக பிறப்பெடுத்து வரும் வைப்பாற்றில் வெம்பக்கோட்டை ஊராட்சி தொடங்கி சாத்துார் நகராட்சி வரை உள்ள கிராமங்கள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் இருந்து வெளியாகும் சாக்கடை கழிவு நீர் முழுவதுமாக கலந்து வருகிறது. ஊராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக வைப்பாறு நதி சாக்கடை ஆறாக மாறிவிட்டது.இந்த நதியில் சங்கரநத்தம் செக்டேம், சாத்துார் செக்டேம், பெரிய கொல்லப்பட்டி செக் டேம், நாகலாபுரம் செக்டேம்கள் உள்ளன. இவற்றில் அதிக அளவில் கழிவு நீரே தேங்கி நிற்கிறது.இதனால் சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் மாசு அடைந்து வருகிறது. தற்போது கண்மாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் சிறிய அளவில் விவசாய பணிகள் நடந்து வரும் நிலையில் ஆறுகளில் தொடர்ந்து கலந்து வரும் சாக்கடை கழிவு நீர் காரணமாக கிணற்றில் தண்ணீரின் தன்மை மாறுபட்டு கிணற்று பாசனம் மூலம் நடைபெறும் விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.ஆற்றில் நேரடியாக சாக்கடை கலந்து வரும் இடங்களை பொதுப்பணித்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சாக்கடையை சுத்திகரித்த பின்னர் ஆற்றில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை