மேலும் செய்திகள்
விவசாயிகள் 'ஷாக்'
10-Sep-2024
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வாரியம் மூலம் மின் வினியோகம் நடந்து வருகிறது. குறிப்பாக ஊரக பகுதிகளில் கைக்கு எட்டும் துாரத்தில் மின்பெட்டிகள் திறந்து நிலையிலும், அதில் உள்ள மின் சாதனங்கள் பழுதாகி கிடப்பதும் அதிகரித்துள்ளது. இதை கண்காணித்து சரி செய்ய மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக கிராமங்களில் இடி, மின்னலோடு காற்றடிக்கும் போது வயரும் வயரும் உரசி தீப்பொறி ஏற்படுவது, அதை தொடர்ந்து பெய்யும் மழையால் ஈர சூழலோடு மின் சாதனங்கள் உள்ளன. இருக்கன்குடியில் நேற்று முன் தினம்வீட்டின் முன் விளையாடும் போது மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுமி இறந்தார்.வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதாலும், காலாண்டு விடுமுறை என்பதாலும் மாணவர்கள், சிறுவர்கள் வெளியே விளையாடுவது அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது.இதே நேரம் மாவட்டத்தில் மின்துறையில் பெரிய பிரச்னையாக இருப்பது ஊழியர்கள் பற்றாக்குறை தான். வயர்மேன்கள் போதிய அளவில் இல்லை. கேங் மேன்கள் பணிபுரியும் போது விபத்தில் சிக்கி தீக்காயமடைகின்றனர். பல கிராமங்களை ஒரே ஒரு வயர்மேன் தான் பார்க்கும் சூழல் உள்ளது. இதனால் கிராமங்களில் மழை நேரத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதை சரி செய்ய நீண்ட நேரம் ஆகிறது.நகர்ப்புறங்களிலும் வயர்மேன்கள் அதிக பகுதிகளை பார்ப்பதால் மன உளைச்சலோடு பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டிலே நிறைய பேர் வயர் விழுந்தும், மின்கசிவால் விபத்து ஏற்பட்டும் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் மாவட்ட மின்துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது காலாண்டு விடுமுறை விட்டுள்ளதால் வெளியே விளையாட செல்லும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிப்பதும் அவசியமாக உள்ளது. தங்கள் பகுதியில் ஏதேனும் பழுது மின்பெட்டிகள், திறந்த நிலையில் மின்சாதனங்கள் இருப்பதை கண்டாலோ, மின்கசிவு பிரச்னையை சந்தித்தாலோஉடனடியாக மின்வாரியத்திடம் புகார் அளிக்க வேண்டும்.
10-Sep-2024