உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாதன்குளம் பிள்ளையார் கோயில் பணிகள் முழுமை அடைந்த பின் தான் கும்பாபிஷேகம்

தாதன்குளம் பிள்ளையார் கோயில் பணிகள் முழுமை அடைந்த பின் தான் கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் கோயிலில் பணிகள் முழுமையான பிறகு தான் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் இந்து சமய அறநிலைக்கு பாத்தியப்பட்ட தாதன்குளம் விநாயகர் கோயில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகம் பணிகளுக்காக 2022 ல் பாலாலயம் செய்யப்பட்டு, 2 ஆண்டுகளாக பணி நடந்து வருகிறது. பணிகள் முழுமை அடையாத நிலையில் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள விரிசலை சரி செய்ய வேண்டும். ராஜகோபுரம், விமானத்தில் உள்ள கலசங்களில் தங்க முலாம் பூசப்பட வேண்டும். அன்னதான மண்டபத்தை சரி செய்ய வேண்டும். மடப்பள்ளியை வெள்ளை அடித்து சீர் அமைக்க வேண்டும்.தரைத்தளத்தில் உள்ள தளங்களை செப்பனிட வேண்டும் உட்பட பல்வேறு பணிகளை செய்த பின் கும்பாபிேஷகம் நடத்த வேண்டுமேன கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேற்று பா.ஜ., பொதுச்செயலாளர் பாண்டி, விவசாயி தலைவர் அழகர்சாமி, கவுன்சிலர் முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் சீதாராமன் ஆகியோர் கோயில் செயல் அலுவலர் திலகவதியிடம் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ