உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொழில்நுட்ப மையங்கள் துவக்கம்

தொழில்நுட்ப மையங்கள் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை, பாலக்காடு ஜெட் ஏரோஸ்பேஸ் உடன் இணைந்து ட்ரோன் தொழில்நுட்ப மையத்தை வேந்தர் ஸ்ரீதரன் துவக்கி வைத்தார். சென்னை குட்லிப் மொபிலிட்டி நிறுவனம், ஸ்ரீபெரும்புதூர் அட்லான் தயாரிப்பு நிறுவனம் கூட்டு ஐகேர் மாணவர் கிளப்பை துணை தலைவர் சசிஆனந்த் திறந்து வைத்தார். நிறுவன அதிகாரிகள் கிருத்திகா, அஜீத் பாபு, ஜெஸ்ஸி மிச்லா பேசினர். துணை வேந்தர் நாராயணன் பதிவாளர் வாசுதேவன், டீன் ஆறுமுகபிரபு, துறை தலைவர்கள் செந்தில் குமார், ஆதம்கான் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சரத் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ