உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் வழக்கறிஞர்கள் மறியல்

ஸ்ரீவி.,யில் வழக்கறிஞர்கள் மறியல்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் வழக்கறிஞர் சங்க பொருளாளர் சதீஷ்குமார் குறித்து அவதூறாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட முத்து கிருஷ்ணனை கைது செய்யாத போலீசாரை கண்டித்து நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர் சங்க பொருளாளர் சதீஷ்குமார், அவரது குடும்பத்தினர் குறித்து கோட்டைப்பட்டியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டிருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவரை கைது செய்ய வில்லை. அவரை கைது செய்ய கோரி, வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜையா, செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் சதீஷ்குமார் உட்பட ஏராளமான வக்கீல்கள் நேற்று மதியம் 12:25 மணிக்கு, நீதிமன்றம் முன்பு சிவகாசி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பின்னர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் முன்னிலையில் வழக்கறிஞர்கள், டி.எஸ்.பி ராஜா பேச்சுவார்த்தை நடத்தினர். இரவுக்குள் முத்துகிருஷ்ணனை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததால் தற்காலிகமாக போராட்டத்தை வழக்கறிஞர்கள் கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை