மேலும் செய்திகள்
இன்பத்தமிழ் இலக்கிய மன்றம்
13-Jul-2025
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா நடந்தது. மாணவி ஷாலினி வரவேற்றார். மன்றச் செயலாளர் மாணவர் முருகன் தலைமை வகித்து பேசினார்.எழுத்தாளர் ம.மணிமாறன் பங்கேற்று 'இலக்கியம் என்னவெல்லாம் செய்யும்' என்ற தலைப்பில் பேசினார். இலக்கிய மன்றத் தலைவரும் கல்லுாரி முதல்வருமான சாரதி, தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி ராசா, துணைத் தலைவர் செந்தில்குமார் வாழ்த்தினர். மாணவி முத்தமிழ் செல்வலெட்சுமி நன்றிக் கூறினார். நிகழ்ச்சியினை பேராசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார்.
13-Jul-2025