உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இலக்கியங்கள்; கலெக்டர் ஜெயசீலன் பேச்சு

அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இலக்கியங்கள்; கலெக்டர் ஜெயசீலன் பேச்சு

ராஜபாளையம் : 'மக்கள் போராட்டங்களை இலக்கியங்கள் அந்தந்த கால கட்டங்களில் பதிவு செய்தது அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கிறது., என ராஜபாளையத்தில் நடந்த இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.ராஜபாளையத்தில் ராஜூக்கள் கல்லுாரியில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறையை துவக்கி வைத்து கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில்,இலக்கியமும் கவிதைகளும் எந்த ஒரு படைப்பும் சமூகத்தில் பேசப்படாத சுமைகளை குரல்களை பேசுகிறதா விளிம்பு நிலை மக்களின் குரலாக பதிவு செய்யப்படுகின்றனவா என்பது முக்கியம்.சுதந்திர போராட்டத்தில் 1920, 1930, 1940 ஆகிய காலகட்டத்தில் முக்கிய போராட்டக் காலமாக கருதப்படுகிறது. இது போன்ற மக்கள் போராட்டங்களை இலக்கியங்கள் அந்தந்த கால கட்டங்களில் பதிவு செய்தது அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கிறது.தற்காலிகமாக போதைப் பொருட்கள் தரக்கூடிய மகிழ்ச்சியை விட வாசிப்பு அனுபவம் இலக்கியமும் அதில் இருக்கக்கூடிய செல்வங்களும் அதிக மகிழ்ச்சியை தருகின்றன. அவற்றை புரிந்து கொண்டு எல்லோருக்கும் கடத்துவதும் படைப்பாளர்களாக உருவாக்குவதற்கும் இந்த இலக்கியப் பட்டறை பயன்படுமேயானால் அதுதான் இதன் வெற்றி,என்றார்.கவிஞர் ஜெயந்தா, அரியலூர் மாவட்டப்பதிவாளர் சு.பாலசுப்பிரமணியன் பேராசிரியர் ராமச்சந்திரன், கலாப்ரியா உள்ளிட்டோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ