தரம் குறைந்த பெருங்காயம் கடை உரிமம் சஸ்பெண்ட்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தரம் குறைவான பெருங்காயம் விற்பனை செய்த மளிகை கடை உரிமையை சஸ்பென்ட் செய்தும் , மதுரையில் உள்ள உற்பத்தி நிறுவன உரிமத்தை சஸ்பெண்ட் செய்யவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். ராஜபாளையத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த வாரம் சோதனையில் ஈடுபட்டனர். காந்தி சிலை ரவுண்டானா அருகே மளிகை கடையில் பெருங்காயம் மாதிரி எடுத்து பகுப்பாய்விற்காக ஆய்வகத்திற்கு அனுப்பினர். அதில் நிர்ணயிக்கப்பட்ட தரம் குறைவானது என பகுப்பாய்வில் தெரிந்தது. இதனை அடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தரம் குறைவான பெருங்காயம் விற்பனை செய்த மளிகை கடை உணவு பாதுகாப்பு உரிமை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து நியமன அலுவலர் மாரியப்பன் உத்தர விட்டார். மதுரையில் உள்ள பெருங்காய தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தையும் இடை நீக்கம் செய்யுமாறு மதுரை மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.