உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மோட்டார் வாகனப் பராமரிப்பு துறையில் மெக்கானிக் பற்றாக்குறை

மோட்டார் வாகனப் பராமரிப்பு துறையில் மெக்கானிக் பற்றாக்குறை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் மோட்டார் வாகன பராமரிப்பு துறையின் அரசு தானியங்கி பணிமனையில், மெக்கானிக் பற்றாக்குறையால் வாகனங்கள் பராமரிப்பு பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் முக்கியஸ்தர்கள் பாதுகாப்பிற்கு செல்லும் வாகனங்கள், அரசின் பல்வேறு துறையைச் சேர்ந்த வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய விருதுநகர் மோட்டார் வாகன பராமரிப்பு துறையின் பணிமனையில் போதிய மெக்கானிக்கள் இல்லை.இதனால் பிற மாவட்டங்களில் இருந்து மெக்கானிக்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் விருதுநகருக்கு வந்து பணிகளை செய்கின்றனர். மெக்கானிக் பற்றாக்குறை இருப்பதால் அரசு துறை வாகனங்களில் ஆயில், டயர் மாற்றுதல், சிறு சிறு பழுதுகளை நீக்குதல் என ஒரு நாளைக்கு 50 முதல் 70 வாகனங்களுக்கு பணிகள் செய்யப்படுகிறது.ஆனால் பெரிய அளவில் பராமரிப்பு பணிகள் தேவைப்படும் வாகனங்களை வெளியில் கொடுத்து பணிகள் முடித்து பெற்று கொடுக்கின்றனர். இப்படி வெளியே சென்று செய்யும் பணிகளுக்கு ஆகும் செலவு அந்தந்த துறையினரிடம் பெறப்படுகிறது.வாகனங்களை வெளியே கொடுத்து பணிகளை முடிப்பதற்கு நாங்களே நேரடியாக வெளியே கொடுத்து உடனடியாக முடித்து விடுவோம் என அனைத்து துறையினரும் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கூடுதல் பணியாக வரும் மெக்கானிக்கள் விடுமுறை எடுத்து கொண்டால் வாகனங்கள் தேங்கும் நிலை உள்ளது.இதனால் அரசு துறையைச் சேர்ந்தவர்கள் வாகனங்களை அனுப்பவதற்கே யோசிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். எனவே மோட்டார் வாகன பராமரிப்பு துறையை நவீனப்படுத்தி, மெக்கானிக் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை