உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மலைவாழ் மக்களுக்கான மருத்துவ முகாம்

மலைவாழ் மக்களுக்கான மருத்துவ முகாம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா ராம் நகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட சுகாதாரத்துறை, ராம்கோ சிமெண்ட்ஸ், சேதுராமம்மாள் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மலைவாழ் மக்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி இருதய ராணி தலைமை வகித்தார். ராம்கோ சிமெண்ட் துணைப் பொது மேலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். ராம்கோ பி.ஆர்.ஓ. முருகேசன் வரவேற்றார்.டாக்டர்கள் தருண்ஆனந்த், விஜய் ஆனந்த், சிவகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினர். ஜெயந்த் பழங்குடியினர் சேவை பிரிவு மேலாளர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ