உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் 10 விவசாயிகளுக்கு அங்ககச் சான்று

மாவட்டத்தில் 10 விவசாயிகளுக்கு அங்ககச் சான்று

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 10 விவசாயிகளுக்கு அங்ககச்சான்று அதாவது இயற்கை விவசாயம் செய்வோர் என்பதற்கான சான்றுவழங்கப்பட்டுள்ளது என வேளாண்துறை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலினும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறார். இயற்கை விவசாயத்திற்கு மாறுவது என்பது படிப்படியான ஒரு நடைமுறை. ஒரே மாதத்திலோ அல்லது ஆண்டிலோ மாறிவிட முடியாது. 4 ஆண்டுகள் வரை ஆகும். படிப்படியாக ஒவ்வொரு மாற்றமாக செய்து மண்வளத்தை மேம்படுத்தி, இயற்கை இடு உரங்களை இட்டு, கடைசியாக இயற்கையான சூழலை உருவாக்கி வளர்க்கும் போது தான் இயற்கை விவசாயம் சாத்தியமாகிறது. இதை மாவட்ட வேளாண்துறை,விதை சான்று அங்ககச்சான்று துறை மூலம் உறுதி செய்கிறது.இத்துறை மூலம் 44 பேர் இயற்கை விவசாயத்திற்காக சான்று பெறும் பணியில் விண்ணப்பித்ததில் 10 பேர் அங்கக சான்று பெற்றுள்ளனர். 3 பேர் முதல் ஆண்டு மாற்றத்திலும், 17 பேர் இரண்டாம் ஆண்டு மாற்றத்திலும், 14 பேர் 3ம் ஆண்டு மாற்றத்திலும் உள்ளனர். இவர்கள் தனி விவசாயிகள். இதே போல் குழுவாக 5 விவசாய குழுக்கள் அங்கக சான்று பெற்றுள்ளது.சிறுதானியங்கள், பழமரங்கள், காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகள் தான் சான்று பெற முன் வருகின்றனர். பிற விவசாயிகளும் முன் வர வேண்டும் என வேளாண்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை