உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கூலித்தொழிலாளிக்கு ஜவ்வு நுண் துளை அறுவை சிகிச்சை

கூலித்தொழிலாளிக்கு ஜவ்வு நுண் துளை அறுவை சிகிச்சை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் நடப்பதில் சிரமத்திற்கு ஆளான மாரிமுத்து என்பவருக்கு ஜவ்வு நுண்துளை அறுவை சிகிச்சையினை டாக்டர்கள் செய்தனர்.வத்திராயிருப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து,34, கூலித் தொழிலாளி. இவருக்கு வலது பக்க முழங்கால் மூட்டில் அடிபட்டு ஒரு மாதமாக நடக்கும்போது வழுக்கி விழுவது போலவும், கீழே விழுவது போலவும் சிரமப்பட்டு வந்தார்.வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சேர்ந்தார். இதில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பார்த்தபோது முழங்கால் மூட்டு ஜவ்வின் முன் பகுதி கிழிந்திருப்பது தெரியவந்தது.இதனையடுத்து அவருக்கு முழங்கால் மூட்டின் ஜவ்வில் நுண்துளை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.தலைமை டாக்டர் பாலகிருஷ்ணன், எலும்பு முறிவு டாக்டர் அருண் சிவராம், மயக்கவியல் டாக்டர் ஷர்மிலி குழுவினர், ஜவ்வு நுண்துளை அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார். ஓரிரு நாளில் நடைபயிற்சி அளித்து பூரண குணமடைவார் என டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி