உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மிலிட்டரி கேண்டீன் மது பாட்டில் விற்பனை; முன்னாள் ராணுவ வீரர் மனைவி கைது

மிலிட்டரி கேண்டீன் மது பாட்டில் விற்பனை; முன்னாள் ராணுவ வீரர் மனைவி கைது

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம்ராஜபாளையத்தில் மிலிட்டரி கேண்டீன் மதுபாட்டில்களை விற்பனை செய்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி மணிமேகலையை, ஸ்ரீவில்லிபுத்துார் மதுவிலக்கு போலீசார் கைது செய்து, 153 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் 50, முன்னாள் ராணுவ வீரர். இவர் தென்காசியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்த போது அங்கு மிலிட்டரி கேண்டீன் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக தென்காசி போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அவரது மனைவி மணிமேகலை 42, யும் மது பாட்டில்களை விற்பனை செய்வது தெரிய வந்தது.இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் மதுவிலக்கு போலீசார் அவரையும் கைது செய்து வீட்டில் இருந்த 153 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்துார் மிலிட்டரி கேண்டீன் ரோட்டில் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட ராஜ்குமார் 49 என்ற முன்னாள் ராணுவ வீரரை கைது செய்து அவரிடம் இருந்த 25 மதுபாட்டில்களை ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை