உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எஸ்.பி.கே., பள்ளி கட்டடங்கள் திறப்பு அமைச்சர் பங்கேற்பு

எஸ்.பி.கே., பள்ளி கட்டடங்கள் திறப்பு அமைச்சர் பங்கேற்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே., கல்வி குழும பள்ளிகளின் கூடுதல் கட்டடங்களை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். எஸ்.பி.கே., ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் கூடுதல் கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான விழா நடந்தது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் சங்கரசேகரன், உறவின்முறை செயலர் சரவணன், கோயில் டிரஸ்டி கணேசன் முன்னிலை வகித்தனர். எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசிமுருகன் வரவேற்றார். சசிகலா சுதாகர் குத்து விளக்கு ஏற்றினார். விழாவில் அருப்புக்கோட்டை முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், நாடார்கள் உறவின்முறை உதவி செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் கனகராஜ், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைவர் ஜெய் கணேஷ், துவக்கப்பள்ளி செயலர் சவுந்தரபாண்டியன், ஜூனியர் நர்சரி பள்ளி செயலாளர் ராஜேஷ், கே.எஸ்.எஸ்., மெட்ரிக் பள்ளி செயலர் செந்தில்முருகன், தியாகராஜன் பவர்ணா மருத்துவமனை செயலாளர் பிரசாத் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை